முன்னர் இட்ட இடுகைகளைத் தயவு செய்து படித்து விட்டு (ஆரம்பம், இன்னொரு உலகம்) இதனைத் தொடர்ந்தால் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும்...
"நுண்ணான்கள்"
"நுண்ணான்கள்"
இந்தச் சொல் உங்களுக்குப் புதியதாக இருக்கிறதா ? ஆம் இது முற்றிலும் ஒரு புதிய சொல்லாடலே.. தமிழுக்குக் கிடைத்த ஒரு புதிய கலைச் சொல்லாக் கூட இருக்கலாம். இது எனது எண்ணத்தில் புதியதாக தோன்றியதே...
சரி 'நுண்ணான்கள்' அப்படினா என்ன ?
வேறொன்றுமில்லை ஆங்கிலத்தில் நுண்ணுயிரிகளைச் சுருக்கமாக 'Microbes' என்று அழைக்கப்படுகிறன .... அதை நாம் தமிழிலே மேற்சொன்னபடியே அழைப்போம்...
இந்த நுண்ணான்கள் யார் தெரியுமா?.. இவர்களின் சிறப்பு என்ன?...தெரிந்துகொள்வோம்..
இவர்கள் தான் நமது மூதாதயர்கள் ... இந்த உலக உயிரினங்களுக்கே மூத்த குடி மக்கள் இவைகள் தான்.... இதிலிருந்தே அனைத்து உயிரிகளுமே உருவானதாக ஆராய்ச்சிகளும் தெரிவிக்கன்றன..
சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் முதன் முதலில் நுண்ணான்கள் பிரபஞ்ச்சத்தில் உண்டானது. இதிலிருந்து தான் உலக உயிரிகளின் வரலாறு ஆரம்பமாகிறது ... இது பூமி தோன்றி ஒரு பில்லியன் (நூறு கோடி) ஆண்டுகளுக்குப் பின்பே தொடங்குகின்றது இந்த வரலாறு...
இவர்களிடமிருந்து தான் மனிதன் உட்பட அனைத்து விலங்குகளும், தாவர ங்களும் பிறந்தது...
முதலில் இந்த நுண்ணான்கள் கடலில் தோன்றியது, அந்த ஆழமான நீர் இவற்றிற்கு சிறந்த வாழ்விடமாக, ஊடகமாக இருந்தது... அவைகள் 'ஆர்க்கியா' (Archaea) எனப்பட்டது..
Archaea |
இது ஒரே ஒரு செல்லால் ஆன எளிய உடற்கூறினை உடைய உயிரினமாகும். இதிலிருந்து தான் பல செல்களால் ஆன கடற் பாசிகள் (அல்லது) ஆல்காக்கள் உருவாகியது..இதுவும் ஒரு நுண்ணானே....
-
அடுத்த பகுதியில் தொடரும்...........
No comments:
Post a Comment