NOTIFICATIONS

Welcome
Showing posts with label இன்னொரு உலகம். Show all posts
Showing posts with label இன்னொரு உலகம். Show all posts

Sunday, March 24, 2013

இன்னொரு உலகம்

முதலில்  உள்ள கட்டுரைகளில் இந்த நுண்ணான்களைப் பற்றி  மிகப் பெரிய  ஒரு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்த உலகமே அதனுடைய ராஜாங்கம் தான், அதன் உலகத்தில் தான் நாம் உட்பட பல உயிர்களும் வாழ்கிறோம் என்று அதில்  பார்த்திருப்போம். 

உங்களுக்குத் தோன்றலாம்,  அப்படி இந்த நுண்ணான்கள் (Microbes)  எங்கே தான்  இருக்குது? என்ன பண்ணுது?   அவைகள் நமக்கு நன்மை செய்யுதா? தீமை செய்யுதா? ... 

 அதன் உலகத்தில் நாம் வாழ்றோம்னு  சொல்றிங்களே  அவங்கள பார்க்க  முடியலையே ? பல கேள்விகள் ...

 நுண்ணான்கள் (Microbes) எங்கே இருக்குது?..

இந்தக் கேள்வியை சிறிது மாற்றிக்  கேட்டால்தான் சரியாய் இருக்கும். அது 
நுண்ணான்கள் (Microbes) எங்கே  இல்லை  என்பதே..  இவை நீக்கமற  எங்கும் நிறைந்திருக்கின்றன. இல்லாத இடம் மிக மிகக் குறைவே.. தொடர்ந்து காண்போம் அவைகள் எங்கே இருக்கிறது என்று..

மண்  

நாம் சில வேளைகளில்  சொல்வோமே  'மண்ணின் மைந்தர்கள்' என்று அதில் ஒரு துளி கூட உண்மை இல்லை... மிகச் சரியாகச் சொன்னால் இந்த மண்ணிற்கு முழுச் சொந்தக்காரர்கள்,   அதன் மைந்தர்கள் இந்த நுண்ணான்களே (Microbes).  ஏன்னா அங்கேயே பிறந்து, வளர்ந்து, பெருகி, வாழ்ந்து மண்ணில் அனைத்து மாற்றங்களையும் செய்து அங்கேயே மடிகின்றன... மண்ணில் புதைந்துள்ள இந்த ஜீவன்களே, மண்ணிற்கு ஜீவனை, வளத்தை, மண்ணிற்கு உண்டான  வாசத்தையும் இதுவே தருகிறது.

நீர் 

 'நீர் இன்றி அமையாது உலகு' இது வள்ளுவப் பெருந்தகையின் சாதரணமான வாக்கல்ல..  தெரிந்தோ தெரியாமலோ  அவன் ஒரு மிகப் பெரும் விஞ்ஞானி.. எப்படி? அவனுக்கு தெரிந்தே  இருக்கிறது உலகின் முதல்  உயிர் தோன்றியதே கடல் நீரில் தான்  என்று ... .ஆம் முதன் முதலில்  உலக உயிரினங்களின்  முதன்மையான  நுண்ணான்கள் (Microbes) இங்கு தான் தோன்றியது என்று முன்பே பார்த்தோம் அல்லவா.. இவைகள்  கடலின் ஆழத்தில்  இருக்கிறது.. கடலில் மிதந்தபடி இருக்கிறது.. கடல் வாழ்  உயி ரிகளின் உள்ளே இருக்கிறது ..  அனைத்து நீர் நிலைகளிலுமே  இவைப் பரவி பெருகி  இருக்கின்றன..

காற்று 


 இங்கே உருவாவதில்லை இவைகள்.. உங்களுக்கு தெரியும் காற்றில் வாயுக்களைத்  தவிர வேறொன்றும் இல்லை என்று.. ஆனால் காற்றிலே இந்த  நுண்ணான்கள் (Microbes) கலந்துள்ளது.. ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லும் ஊடகமாக இந்த காற்று அதற்க்கு உள்ளது... இங்கே அவைகள் பாடித்திரியலாம்.. "காற்று வெளியிடைக் கண்ணம்மா" என்ற பாரதியின் பாடலை ...

மண், நீர், காற்று எங்கும் பரவி விரிந்து இருக்கும் பரந்தாமன் என  சொல்வார்களே  அதைப் போல இருக்கிறது ....

மேற்சொன்னவற்றில் மட்டுமா இருக்கிறது.. என்னில் உள்ளது..  உங்களுக்குள்  உள்ளது... ஆம் நம் வயிற்றிலே, இரைப்பையில்  மற்றும்   நம் தோலிலே ஆயிரக்கனக்கான  நுண்ணான்கள் (Microbes) மிக மிகச் சாதுவாக வாழ்ந்து  கொண்டிருக்குது..

ஏன் அனைத்து விலங்குகளிலும், பாலிலும், செடி, கொடி, மரம் போன்ற தாவரங்களிலும் ஒட்டிக் கொண்டு  அதனையே தமது வாழ்விடமாக, உணவாக
எடுத்துக் கொள்கிறது..

இப்போது சொல்லுங்கள் நுண்ணான்கள் (Microbes) எங்கே இல்லை என்று...


-தொடரும்...







Monday, March 18, 2013

இன்னொரு உலகம்

முன்னர் இட்ட இடுகைகளைத்  தயவு செய்து படித்து விட்டு  (ஆரம்பம், இன்னொரு உலகம்)   இதனைத் தொடர்ந்தால் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும்...

"நுண்ணான்கள்" 

இந்தச்  சொல் உங்களுக்குப்  புதியதாக  இருக்கிறதா ? ஆம்  இது முற்றிலும் ஒரு புதிய சொல்லாடலே.. தமிழுக்குக்  கிடைத்த ஒரு புதிய கலைச்  சொல்லாக் கூட இருக்கலாம்.   இது எனது எண்ணத்தில் புதியதாக  தோன்றியதே...


 சரி 'நுண்ணான்கள்' அப்படினா என்ன ?

வேறொன்றுமில்லை  ஆங்கிலத்தில் நுண்ணுயிரிகளைச்  சுருக்கமாக   'Microbes' என்று  அழைக்கப்படுகிறன .... அதை நாம் தமிழிலே மேற்சொன்னபடியே  அழைப்போம்...

இந்த நுண்ணான்கள்  யார் தெரியுமா?.. இவர்களின் சிறப்பு என்ன?...தெரிந்துகொள்வோம்..

இவர்கள் தான் நமது  மூதாதயர்கள் ... இந்த உலக உயிரினங்களுக்கே மூத்த குடி மக்கள்  இவைகள்  தான்.... இதிலிருந்தே  அனைத்து  உயிரிகளுமே  உருவானதாக   ஆராய்ச்சிகளும் தெரிவிக்கன்றன..

சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் முதன் முதலில்  நுண்ணான்கள் பிரபஞ்ச்சத்தில்  உண்டானது.  இதிலிருந்து தான் உலக உயிரிகளின் வரலாறு ஆரம்பமாகிறது ... இது பூமி தோன்றி ஒரு பில்லியன் (நூறு கோடி) ஆண்டுகளுக்குப்  பின்பே தொடங்குகின்றது இந்த வரலாறு...

இவர்களிடமிருந்து தான்  மனிதன் உட்பட அனைத்து விலங்குகளும்,  தாவர ங்களும்  பிறந்தது...

முதலில் இந்த நுண்ணான்கள்  கடலில் தோன்றியது, அந்த ஆழமான நீர் இவற்றிற்கு  சிறந்த வாழ்விடமாக, ஊடகமாக இருந்தது... அவைகள்  'ஆர்க்கியா' (Archaea) எனப்பட்டது.. 

Archaea
                                                                      


இது ஒரே ஒரு செல்லால் ஆன எளிய உடற்கூறினை  உடைய உயிரினமாகும். இதிலிருந்து தான்  பல செல்களால் ஆன   கடற்  பாசிகள் (அல்லது) ஆல்காக்கள் உருவாகியது..இதுவும் ஒரு நுண்ணானே....


-
அடுத்த பகுதியில் தொடரும்...........





Monday, March 11, 2013

இன்னொரு உலகம்

வணக்கம் ..
முன்னர் இட்ட 'ஆரம்பம்'   இடுகையில்  சில புதிரான கேள்விகளோடு
முடிந்திருந்தது....  அந்த கேள்விகளுக்கான விடையுடன்  இதைத் தொடர்கிறேன் .

யார்  இந்த உலகத்தை மறைமுகமாக, தன் வசப்படுத்தி  தனது ஆட்சிக்குள்
வைத்திருப்பது....  இந்த உலகமே  அதனுடைய  ராஜாங்கம் தான்.


அதுதான்

நுண்மையான   உயிர்கள்,   நம் கண்களுக்குப்  புலப்படாதவை....

சுருக்கமாக நுண் உயிரிகள்  என்று  அறியப்படுகிறது...

எல்லோரும் இதைப் பற்றி அறிந்திருக்கலாம், ஆனலும் இந்த வலை பதிவில்
சுருக்கமாக  முடிந்தால் சரியான  விளக்கங்களுடன்   அதனை பற்றி அறிய
ஒரு பயணத்தை தொடர்வோம்... இது எளிய விளக்கங்களுடன் நமது மொழியிலேயே  தொகுத்து  வழங்கப்படுகிறது.....

இந்த இன்னொரு உலகத்தைப் பற்றி  இனி....

நுண் உயிரிகள்  

நுண்மம் என்றால் தமிழில்   மிகச்  சிறிய  நுட்பமாந கண்களுக்குப் புலப்படாதது என்று  பொருள். அதைப்  பற்றிய  சுவையான  வரலாற்றை இங்கே எழுதலாம் என்று நினைக்கிறேன்.
 அதற்க்கு முன்
 நுண் உயிரிகள்   எவை எவை  என்று தெரிந்து கொள்வோம் ..

1. பாக்டிரியா ( Bacteria)

2. பூஞ்சை  ( Fungi)    அல்லது      காளான்கள் 

3. ஆக்டிநோ  மைசிடஸ் ( Actinomycetes)

4. புரோடோசோவா  

5. பாசிகள்  (Algae)   ஆல்கா 

6. வைரஸ்   (Virus) 


  போன்ற  இன்னும் ஒரிரு  உயரிகளை   இதற்கு உதாரணங்களாகக்  கூறலாம். 

அடுத்த பதிவில் இன்னும் இந்த உலகம் தொடரும்...









 

Saturday, March 9, 2013

ஆரம்பம்

வாருங்கள் வணக்கம்

நாம்  இந்த உலகத்தில் ஆனந்தமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ..... மனிதர்களாகிய நமக்கு இந்த உலகமே  ஏன் இந்த பிரபஞ்சமே கட்டுப்பட்டுள்ளதாகவும்   நாம் அதனை எல்லாம் கட்டுப்படுத்தி வைத்து இருப்பதாகவும்  இறுமாப்புடன் இருக்கிறோம். நம்மை மி ஞ்சியவர்கள்  யாரும் இல்லை என்ற நினைப்பு நம் மூளையை  பலமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.  மனிதர்களின் உலகத்தில் தான் அனைத்து ஜீவ  ராசிகளும் சஞ்ச்சரித்துக் கொண்டிருப்பதாகவும், நமக்காகவே அவை இயங்குவதாகவும் இந்த மனிதர் குலம்  பெருமையோடு  புன்முறுவல் புரிகிறது.

ஆனால் !..

இயற்கையின் தலைமகனாகக் கருதப்படும் மனிதனையும் இந்த உலக இயற்கை வளங்களையும் மற்ற அனைத்து உயிர்களையும்  இதையும் மீறி பிரப்ஞ்ச்சத்தையே  ஆட்டி படிக்கும் ஆற்றல் உடைய நீக்கமற எங்கும் நிறைந்து , உலகின் உயிர்களுக்கு இயற்க்கைக்கு  நன்மைகள் தீமைகள்   உண்டாக்கக் கூடிய  , இன்னும் சொல்லப் போனால்...

அவற்றின் உலகத்தில் தான், அவைகளின் கருணையால் தான் இங்கே அனைத்து உயிர்களும் சம நிலையோடு வா ழ்கிறன. 

யார் அது...  எங்கே இருக்கிறது... ?  தொடர்ந்து பார்ப்போம்...


உங்களுடைய கருத்துக்களை எழுதுங்கள்.