முதலில் உள்ள கட்டுரைகளில் இந்த நுண்ணான்களைப் பற்றி மிகப் பெரிய ஒரு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்த உலகமே அதனுடைய ராஜாங்கம் தான், அதன் உலகத்தில் தான் நாம் உட்பட பல உயிர்களும் வாழ்கிறோம் என்று அதில் பார்த்திருப்போம்.
உங்களுக்குத் தோன்றலாம், அப்படி இந்த நுண்ணான்கள் (Microbes) எங்கே தான் இருக்குது? என்ன பண்ணுது? அவைகள் நமக்கு நன்மை செய்யுதா? தீமை செய்யுதா? ...
அதன் உலகத்தில் நாம் வாழ்றோம்னு சொல்றிங்களே அவங்கள பார்க்க முடியலையே ? பல கேள்விகள் ...
நுண்ணான்கள் (Microbes) எங்கே இருக்குது?..

இந்தக் கேள்வியை சிறிது மாற்றிக் கேட்டால்தான் சரியாய் இருக்கும். அது
நுண்ணான்கள் (Microbes) எங்கே இல்லை என்பதே.. இவை நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றன. இல்லாத இடம் மிக மிகக் குறைவே.. தொடர்ந்து காண்போம் அவைகள் எங்கே இருக்கிறது என்று..
மண்
நாம் சில வேளைகளில் சொல்வோமே 'மண்ணின் மைந்தர்கள்' என்று அதில் ஒரு துளி கூட உண்மை இல்லை... மிகச் சரியாகச் சொன்னால் இந்த மண்ணிற்கு முழுச் சொந்தக்காரர்கள், அதன் மைந்தர்கள் இந்த நுண்ணான்களே (Microbes). ஏன்னா அங்கேயே பிறந்து, வளர்ந்து, பெருகி, வாழ்ந்து மண்ணில் அனைத்து மாற்றங்களையும் செய்து அங்கேயே மடிகின்றன... மண்ணில் புதைந்துள்ள இந்த ஜீவன்களே, மண்ணிற்கு ஜீவனை, வளத்தை, மண்ணிற்கு உண்டான வாசத்தையும் இதுவே தருகிறது.
நீர்
'நீர் இன்றி அமையாது உலகு' இது வள்ளுவப் பெருந்தகையின் சாதரணமான வாக்கல்ல.. தெரிந்தோ தெரியாமலோ அவன் ஒரு மிகப் பெரும் விஞ்ஞானி.. எப்படி? அவனுக்கு தெரிந்தே இருக்கிறது உலகின் முதல் உயிர் தோன்றியதே கடல் நீரில் தான் என்று ... .ஆம் முதன் முதலில் உலக உயிரினங்களின் முதன்மையான நுண்ணான்கள் (Microbes) இங்கு தான் தோன்றியது என்று முன்பே பார்த்தோம் அல்லவா.. இவைகள் கடலின் ஆழத்தில் இருக்கிறது.. கடலில் மிதந்தபடி இருக்கிறது.. கடல் வாழ் உயி ரிகளின் உள்ளே இருக்கிறது .. அனைத்து நீர் நிலைகளிலுமே இவைப் பரவி பெருகி இருக்கின்றன..
காற்று
இங்கே உருவாவதில்லை இவைகள்.. உங்களுக்கு தெரியும் காற்றில் வாயுக்களைத் தவிர வேறொன்றும் இல்லை என்று.. ஆனால் காற்றிலே இந்த நுண்ணான்கள் (Microbes) கலந்துள்ளது.. ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லும் ஊடகமாக இந்த காற்று அதற்க்கு உள்ளது... இங்கே அவைகள் பாடித்திரியலாம்.. "காற்று வெளியிடைக் கண்ணம்மா" என்ற பாரதியின் பாடலை ...
மண், நீர், காற்று எங்கும் பரவி விரிந்து இருக்கும் பரந்தாமன் என சொல்வார்களே அதைப் போல இருக்கிறது ....
மேற்சொன்னவற்றில் மட்டுமா இருக்கிறது.. என்னில் உள்ளது.. உங்களுக்குள் உள்ளது... ஆம் நம் வயிற்றிலே, இரைப்பையில் மற்றும் நம் தோலிலே ஆயிரக்கனக்கான நுண்ணான்கள் (Microbes) மிக மிகச் சாதுவாக வாழ்ந்து கொண்டிருக்குது..
ஏன் அனைத்து விலங்குகளிலும், பாலிலும், செடி, கொடி, மரம் போன்ற தாவரங்களிலும் ஒட்டிக் கொண்டு அதனையே தமது வாழ்விடமாக, உணவாக
எடுத்துக் கொள்கிறது..
இப்போது சொல்லுங்கள் நுண்ணான்கள் (Microbes) எங்கே இல்லை என்று...
-தொடரும்...