Thursday, February 15, 2018

பூஞ்சை - தாவரமா ?



பூஞ்சைகள் மற்றும் காளான்கள் தாவர குடும்பத்தைச் சேர்ந்தவையா?   





இல்லை. அவைகள் முதலில் தாவரங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டிருந்ன. (மண்ணில் இருந்து வளர்வதாலும், நாம் உண்ணும் காளான்கள் தாவரங்களைப் போலிருப்பதாலும்). இப்போது பூஞ்சை விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு இணையான தனிக் குடும்பமாக (kingdom) இருக்கிறது. 

பூஞ்சைகக்காளான்களின் பெரும்பாலான குணங்கள் விலங்குகளையே ஒத்திருக்கிறது.  பூஞ்சைகளின் செல் சுவர் (cell wall) கைட்டின் (chitin) எனப்படும் பொருளால் ஆனது. இந்த கைட்டின் சில வகை பூச்சிகள் மற்றும் நண்டுகளின் ஓடு போன்றவற்றிலுள்ளது. தாவரகளின் செல் சுவர் செல்லுலோஸால் (cellulose) ஆனது. பூஞ்சைகள்  கிளைகோஜென் எனப்படும் பொருளை சேமித்து வைத்துப் பயன்படுத்துகிறது. இக்கிளைகோஜெனை உபயோகிக்கும் வழக்கம் தாவரங்களில் இல்லை.

குளோரோஃபில் (chlorophyll) என்னும் தாவரங்களில் காணப்படும் பச்சைய நிறமிகள்  பூஞ்சைகளில் இருப்பதில்லை. பூசணம் என்றழைக்கபடும் இப்பூஞ்சைகள் உணவுகளைத் தானே தயாரிக்காமல், பிற உயிரினங்களிலிருந்து நொதிகளின் உதவியுடன் உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது, எனவே இவை சார்பூட்ட உயிரிகள் (heterotrophs) என அழைக்கப்படுகிறது.

     பூஞ்சைகளைப் பற்றிய படிப்பிற்க்கு மைக்காலஜி (mycology) என்று பெயர்.

No comments:

Post a Comment